விபத்தில் காயம் அடைந்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை இலவசம்; மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைந்தால் சிகிச்சை இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சாலை விபத்து தொடர்பான வழக்கில் அண்மையில் சுப்ரீம்கோர்ட் கண்டிப்புடன் சில கருத்துகளை கூறி இருந்தது. கடந்த சில மாதங்கள் முன்பு பணமில்லா சிகிச்சை திட்டம் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார்.
இந் நிலையில், நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைந்தால் சிகிச்சை இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இலவச சிகிச்சை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர் மட்டக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விபத்து நிகழ்ந்த நாள் முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறி உள்ளது.
2030க்குள் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் இலக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.











மேலும்
-
மாஸ்கோ சென்ற விமானத்தில் தீ; டில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்
-
இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது: பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
4 மாதங்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர்: சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி சஸ்பெண்ட்
-
ராமநாதபுரம் அருகே எரிவாயுக்குழாயில் உடைப்பு: கசிவு சரி செய்யும் பணி தீவிரம்
-
திருடப்பட்ட தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் சிலை: நெதர்லாந்து ஏலத்தில் தடுத்து நிறுத்தம்!
-
சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை