நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை; முழு லிஸ்ட் இதோ!

12

புதுடில்லி: நாடு முழுவதும் நாளை 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது.


நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் 259 இடங்களில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

நாடு முழுவதும் நாளை டில்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடக்கும் இடங்களின் எண்ணிக்கை மாநில வாரியாக பின்வருமாறு:


* ஆந்திர பிரதேசம்- 2 இடங்கள்,


* அருணாச்சல பிரதேசம்- 5 இடங்கள்,


* அசாம்- 20 இடங்கள்

* பீஹார்- 5 இடங்கள்



*சண்டிகர்- 1 இடம்


* சத்தீஸ்கர்- 1 இடம்


* டில்லி- 1 இடம்


* கோவா- 2 இடங்கள்


*குஜராத்- 18 இடங்கள்


*ஹரியானா-11 இடங்கள்


*ஹிமாச்சல பிரதேசம்- 1 இடம்


* ஜம்மு காஷ்மீர்- 19 இடங்கள்


* ஜார்க்கண்ட் - 6 இடங்கள்


* கர்நாடகா - 3 இடங்கள்


* கேரளா- 2 இடங்கள்


*லட்சத்தீவு- 1 இடம்


*மத்திய பிரதேசம்- 5 இடங்கள்


* மஹாராஷ்டிரா- 16 இடங்கள்


*மணிப்பூர்- 5 இடங்கள்


*மேகலாயா- 3 இடங்கள்


*மிசோரம்- 1 இடம்


* நாகலாந்து- 10 இடங்கள்


* ஒடிசா- 12 இடங்கள்


* புதுச்சேரி- 1 இடம்


* பஞ்சாப்- 20 இடங்கள்


*ராஜஸ்தான்- 28 இடங்கள்


* சிக்கிம்- 1 இடம்


* திரிபுரா- 1இடம்


* உத்தரபிரதேசம்- 19 இடங்கள்


* உத்தரகண்ட்- 1 இடம்


* மேற்குவங்கம்- 31 இடங்கள்


* அந்தமான் நிக்கோபர்- 1 இடம்

தமிழகத்தில்....!



தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடக்க உள்ளது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.



இதற்கு முன்பு, 1971ம் ஆண்டு போர் ஒத்திகை பாதுகாப்பு நடந்தது. தற்போது 54 ஆண்டுகள் கழித்து போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement