திருடப்பட்ட தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் சிலை: நெதர்லாந்து ஏலத்தில் தடுத்து நிறுத்தம்!

சென்னை: அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்ட தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் உலோகச் சிலை நெதர்லாந்தில் ஏலம் விடும் முயற்சியைதமிழக சிலை திருட்டு தடுப்பு போலீசார், தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து சிலை திருட்டு போலீஸ் அறிக்கை:
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாகப்பட்டினம் வட்டம் திருப்புகழூர் அருள்மிகு அக்னீஸ்வரர் கோவிலில் தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் உலோகச் சிலைஅடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது. இது குறித்து திட்டச்சேரிகாவல் நிலையத்தில் வழக்குபதிவுசெய்யப்பட்டது. இல்வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கண்ணப்பநாயனார் சிலையானது நெதர்லாந்தில் மாண்டரிச்லில் ஐரோப்பிய நுண்கலை கண்காட்சி 2025ல் ஏலமிடப்பட உள்ளதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக அப்போதைய சிலை திருட்டு தடுப்புபிரிவு காவல்துறை தலைவர் பிரவேஷ்குமார், ஏலத்தைத்தடுத்து நிறுத்த, நெதர்லாந்திலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்திய தொல்லியல்துறைக்கும் கடந்த மார்ச்- 18 ஆம் தேதி அன்று அவசர மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
இந்தமுயற்சியின் கரணமாக தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் சிலை மார்ச்-23 முதல் நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரகம் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இத்தொன்மை வாய்ந்த சிலையினை நெதர்லாந்து அரசிடமிருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கானும் தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் உலோகச்சிலை ஏலமிடப்பட இருந்தது. தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரின் துரித முயற்சியால் தடுக்கப்பட்டது.
இச்செயலினை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் சங்கர் ஜூவால், சிலை திருட்டு தடுப்புபிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் டி. கல்பனா நாயக், முன்னாள் காவல்துறை தலைவர் பிரவேஷ்குமார், காவல்கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. சிவகுமார் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மத்திய மண்டலம் திருச்சி கோ.பாலமுருகன், கும்பகோணம் சரக காவல் ஆய்வாளர் ஆர்.பி. கவிதா ஆகியோரை பாராட்டினார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.