இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவு: அசாமில் இதுவரை 43 பேர் கைது

15


குவஹாத்தி: இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவு தெரிவித்த தேசவிரோதிகள் 43 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.


ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதல் குறித்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய ஷாஹிதுல் இஸ்லாம் என்ற நபரை இன்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவாக பேசிய, ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் உள்பட இதுவரை தேசவிரோதிகள் 43 பேர் அசாமில் கைது செய்யப்பட்டனர் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார். மேலும் அவர், எந்த துரோகியையும் விடுவிக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.

Advertisement