சொந்த மக்கள் மீது குண்டு வீசும் பாக்.,: சொந்த அரசை விமர்சிக்கும் மதகுரு

இஸ்லாமாபாத்: '' பாகிஸ்தான் அரசு சொந்த மக்கள் மீதே குண்டு வீசுகிறது. இதுபோல், இந்தியாவில் நடப்பது கிடையாது,'' என பாகிஸ்தானை சேர்ந்த மதகுரு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியாவிற்கு எதிராக நடக்கும் போர் இஸ்லாம் சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்து உள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மஸ்ஜித் என்ற மசூதியில் அப்துல் அஜிஜ் காசி என்ற மதகுரு பேசியதாவது: பாகிஸ்தானில் இருக்கும் அமைப்பு என்பது, அடக்குமுறை அமைப்பாக உள்ளது. இந்தியாவை விட மோசமாக இருக்கிறது. பாகிஸ்தானில் இருப்பது போன்ற அடக்குமுறை இந்தியாவில் இல்லை. சொந்த மக்கள் மீது இந்தியா அணுகுண்டுகளை போட்டு உள்ளதா?
பாகிஸ்தானை போல், இந்தியாவில் மக்கள் திடீரென மாயமாகிறார்களா?
வஜீரிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் நடப்பது என்ன ?
அங்கு அட்டூழியங்கள் மட்டுமே நடக்கிறது.அங்கு சொந்த மக்கள் மீது குண்டு போடப்படுகிறது. இதுபோன்ற அட்டூழியங்கள் இந்தியாவில் நடக்கவில்லை.அந்நாட்டு விமானப்படை சொந்த மக்கள் மீது குண்டை வீசியதா?
இங்கு தங்களது குடும்பத்தினரை தேடி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத குருக்கள், பத்திரிகையாளர்கள், காணாமல் போகின்றனர். தெஹ்ரீக் இ இன்சாப் உறுப்பினர்களும் காணாமல் போகின்றனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவிற்கான பாக்., தூதரும் ஹூசைன் ஹக்கானியும் சமூக வலைதளத்தில் வெளியிட, பாகிஸ்தான் அரசு மீது விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர்.




மேலும்
-
நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு பள்ளிகளிலும் அறிய ஏற்பாடு
-
ஒதுக்கீடு பலனை அனுபவித்தவர்கள் மற்றவர்களுக்கு இடம் தருவதில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதி விமர்சனம்
-
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி
-
மின்வாரிய தொழிலாளர் மாவட்ட செயற்குழு கூட்டம்
-
'கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் தாமதம் கூடாது'
-
பெருநகர் பாலத்தில் சாலை சேதம்