அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் அடுத்த முதல்வர் என்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்

9

சென்னை: '' அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதல்வர் என்கின்றனர்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


சென்னையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சி, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆட்சி, மத்திய அரசுக்கே வழிகாட்டும் ஆட்சி தி.மு.க., ஆட்சிதான்.நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான் தான் அடுத்த முதல்வர் என்கின்றனர். நேற்று கட்சி எல்லாம் நான் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள்.

அரசியலுக்கு அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதல்வர் என்று பேசக்கூடிய நிலை தான் உள்ளது. நாம் அதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஆட்சிக்கு வர வேண்டும். ஆட்சி தான் குறிக்கோளுடன் தி.மு.க., துவங்கப்படவில்லை. ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தி.மு.க., துவங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

நியாயமான விமர்சனத்தை எதிர்கொள்வோம்



இதன் பிறகு நிருபர்களைச் சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: மே 7 ம் தேதி தி.மு.க., ஆட்சி 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 7 வது முறையாக தி.மு.க., தான் அடுத்து ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளின் நியாயமான விமர்சனத்தை எதிர்கொள்கிறோம். அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்வது இல்லை.


அனைத்து வாக்குறுதிகளும் ஓராணடிற்குள் நிறைவேற்றப்படும். ஏற்கனவே நிறைவேற்றிய திட்டங்கள் மக்களை நன்றாக சென்றடைந்துள்ளன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Advertisement