பிரீமியர் லீக் கிரிக்கெட்: குஜராத்திற்கு 156 ரன்கள் இலக்கு

மும்பை: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், குஜராத் அணி வெற்றி பெற 156 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடக்கிறது. மும்பை அணிக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரியான் ரிக்கல்டன் 2 ரன்னுக்கும், ரோகித் சர்மா 7 ரன்னுக்கும் அவுட்டாகினர்.
அடுத்து ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் சூர்ய குமார் யாதவ் ஜோடி ரன்களை சேர்த்ததால் மும்பை அணியின் ரன் உயர்ந்தது. ஆனால்,அரைசதம் அடித்த வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ரஷீத் கான் பந்தில், சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.
சூர்யகுமார் யாதவ் 35 ரன் எடுத்த போது சாய் கிஷோர் பந்தில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.
அடுத்து வந்த திலக் வர்மா(7), கேப்டன் ஹர்திக் பாண்டியா(1), நமன் திர்(7) அவுட்டாகினர். கடைசியில் கார்பின் போஸ்ச் 27 ரன் எடுத்து ரன் அவுட்டாக மும்பை அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை.
அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
குஜராத் அணியின் சாய் கிஷோர் 2, சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, ரஜீத் கான், ஜெரால்ட் கோயிட்சே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


மேலும்
-
மீண்டும் வருகிறார் சின்னர்
-
பைனலுக்கு செல்லுமா இந்தியா * தென் ஆப்ரிக்காவுடன் கடைசி மோதல்
-
இங்கிலாந்து தொடரில் சுதர்சன், குல்தீப் * தேர்வுக்குழு முன்னாள் தலைவர் கணிப்பு
-
'மொபைல் போனில் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்'
-
போபண்ணா 'நம்பர்-1' * இந்திய வீரர்களில் அபாரம்
-
தீவிரவாத தாக்குதலை கண்டித்து பா.ஜ., போராட்டம்