'மொபைல் போனில் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்'

மேட்டுப்பாளையம்: மொபைல் போனில் இளைஞர்கள் மூழ்கி, தங்களின் வாழ்க்கையை தொலைத்து விடாதீர், என, இந்திய முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் ராமன் விஜயன் பேசினார்.
காரமடை அருகே உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி சேர்மன் தர்மலிங்கம் தலைமை வகித்தார். தாளாளர் கார்த்திகேயன், துணை தாளாளர் அகிலேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் ராமன் விஜயன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
கால்பந்து விளையாட்டு பயிற்சியகத்தில் சேர்ந்த போது, நான் இந்திய கால்பந்து விளையாட்டில் விளையாடுவேன் என கூறினேன். அதற்கு உடன் இருந்தவர்கள் கிண்டல் செய்தனர். விடாமுயற்சியும் தொடர்ந்து பயிற்சியும் பெற்று வந்ததால், இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்றேன். அதிக கோல் அடித்தவர்களில் நான் இரண்டாவது இடத்தில் உள்ளேன். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். அதை வெளிக் கொண்டு வந்து, அதில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாடத்திட்டத்தையும் தாண்டி, விளையாட்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மொபைல் போனில் இளைஞர்கள் மூழ்கி, தங்களின் வாழ்க்கையை தொலைத்து விடாதீர். இவ்வாறு ராமன் விஜயன் பேசினார்.
ஒட்டுமொத்த கோப்பையை சோழன் அணி வென்றது. விழாவில் கல்லூரி செயலர் புனிதவள்ளி, துணை செயலர் வித்யா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
மேலும்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்
-
அங்கன்வாடிகளுக்கு 15 நாள் விடுமுறை