போபண்ணா 'நம்பர்-1' * இந்திய வீரர்களில் அபாரம்

புதுடில்லி: இந்திய டென்னிசில் மீண்டும் 'நம்பர்-1' வீரர் ஆனார் போபண்ணா.
டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.
இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, 5 இடம் முன்னேறி, 33வது இடம் பிடித்துள்ளார். கடந்த வாரம் நடந்த மாட்ரிட் டென்னிசில் போபண்ணா ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றதால், இந்த முன்னேற்றம் கிடைத்தது. இதனையடுத்து 45 வயதான போபண்ணா, மீண்டும் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார்.
பாம்ப்ரி 'நம்பர்-2'
கடந்த 2019, அக்டோபர் முதல், 2025 மார்ச் வரை என தொடர்ந்து 286 வாரம் முதலிடத்தில் இருந்த போபண்ணா, கடந்த மாதம் இந்தியாவின் யூகி பாம்ப்ரியிடம் முதலிடத்தை இழந்தார்.
தற்போது, மாட்ரிட் தொடரில் முதல் சுற்றில் தோற்றதால், யூகி பாம்ப்ரி, 35வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய அளவில் 'நம்பர்-2' வீரராக உள்ளார்.
மற்ற இந்திய வீரர்கள் ஸ்ரீராம் பாலாஜி (68 வது), ரித்வித் (76), 8 இடம் முன்னேறிய அனிருத் (99), 'டாப்-100' இடங்களில் உள்ளனர்.
மேலும்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்