பைனலுக்கு செல்லுமா இந்தியா * தென் ஆப்ரிக்காவுடன் கடைசி மோதல்

கொழும்பு: முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்க உள்ளது.
இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதுகின்றன. 'டாப்-2' இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.
இந்திய அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டியில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளியுடன் (ரன் ரேட் 0.433) பெற்று, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கை (4, -0.166), தென் ஆப்ரிக்கா (2, -0.356) அடுத்த இரு இடத்தில் உள்ளன.
இன்று இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் வென்றால் 6 புள்ளியுடன் முதல் அணியாக பைனலுக்கு செல்லலாம். கடைசியாக இலங்கையுடன் சொதப்பிய இந்திய அணியின் தொடர்ச்சியான 8 வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது.
இருப்பினும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் துவக்க வீராங்கனை பிரதிகா (163 ரன்), ஸ்னே ராணா (11 விக்.,), அனுபவ ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கைகொடுத்தால் வெற்றி எளிதாகும்.
தடுமாறும் தெ.ஆப்.,
தென் ஆப்ரிக்க அணி 'பார்ம்' இல்லாமல் தடுமாறுகிறது. கடைசியாக பங்கேற்ற 9 போட்டியில் 8ல் தோற்றுள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டும் சுமாராக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி ஓவரில் தோற்றது. முன்னணி பேட்டிர் தஸ்மின், விக்கெட் கீப்பர் கரபோ மெசோ என பலரும் வெயிலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். கேப்டன் லாரா, சுனே லஸ் போராடினால் இந்தியாவுக்கு நெருக்கடி தரலாம்.
மேலும்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்