பக்தர்கள் கம்பத்துக்குபுனிதநீர் ஊற்றி வழிபாடு




குளித்தலை:குளித்தலை, மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு, துவங்கி நடந்து வருகிறது. குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதியில் உள்ள பொது மக்கள் தங்களது வேண்டுதல்களை

நிறைவேற்றும் வகையில், தினமும் அதிகாலை 5:00 மணியில் இருந்து பக்தர்கள் கடம்பவனேஸ்வரர் மற்றும் பரிசல் துறை காவிரி ஆற்றில் நீராடி விட்டு, புனிதநீர் அடங்கிய தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள கம்பத்தில் புனிதநீர் ஊற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீர் எடுத்து வருகின்றனர்.

Advertisement