105 பள்ளிகளுக்கு சீருடை அனுப்பும் பணி தீவிரம்

வானுார், : தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 1 வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படுகின்றன. இந்த கல்வியாண்டில் வானூர் வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு சீருடை அனுப்பும் பணி துவங்கி உள்ளது.
வட்டார கல்வி அலுவலர் பாண்டுரங்கன் தலைமையிலான அலுவலகப் பணியாளர்கள், அந்தந்த பள்ளிகளுக்கு சீருடைகளை ஆட்டோக்கள் மூலம் ஏற்றி அனுப்பி வருகின்றனர்.
வானூர் வட்டாரத்தில் உள்ள மொத்தம் 105 துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 2160 மாணவர்களுக்கும், 2270 மாணவிகளுக்கு முதல் பருவத்திற்கான சீருடைகள் வழங்கப்பட உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement