கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு



கரூர் க.பரமத்தி அருகில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், சட்ட விரோதமாக கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என கூறப்பட்டது.

க.பரமத்தி அருகில், காட்டுமுன்னுாரில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், தனியார் கல்குவாரி தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசியதாவது:

தென்னிலை கிழக்கு பகுதியில், தனியார் கல்குவாரி அமைக்கப்படவுள்ளது. இதன் அருகில், 300 மீட்டர் சுற்றளவில் வீடுகள், 287 மீட்டரில் உயர்மின் கோபுரம், குவாரி கீழ்புறம் உள்ள தார் சாலை, பொதுச்சாலைக்கு, 50 மீட்டர் இடைவெளி இல்லாமல் இருப்பது, 500 மீட்டர் சுற்றளவில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இவைகள் இருப்பதை மறைத்து தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில், சட்ட விரோதமாக குவாரிக்கு அனுமதி தரக்கூடாது. மோசடி ஆவணங்களை தாக்கல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

Advertisement