மோசமான தார்ச்சாலை

கிருஷ்ணராயபுரம்:வேங்காம்பட்டி பகுதியில் இருந்து, அய்யர்மலை வரை செல்லும் தார்ச்சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் போது தடுமாறி விழுகின்றனர். எனவே, சாலையை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement