மின்வாரிய தொழிலாளர் மாவட்ட செயற்குழு கூட்டம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மாநில செயலாளர் பாவலன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், மண்டல செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமிழ்மணி வரவேற்றார்.

புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, 2025-26ம் ஆண்டிற்கான ஆண்டு சந்தா, தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்களின் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் உள்ள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், விருத்தாசலம் கோட்ட செயலாளர் பழனிவேல், கோட்ட துணைத் தலைவர் பெரியசாமி, ஆனந்த், சுந்தரராஜன், வெற்றி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement