பெருநகர் பாலத்தில் சாலை சேதம்

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலை, பெருநகருக்கும், வெள்ளாமலைக்கும் இடையே செல்லும், செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த பாலத்தை பயன்படுத்தி தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் வழியே ஜல்லி, எம்.சான்ட் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன.

இதனால், பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமடைந்து உள்ளது. சேதமடைந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிக்கி, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

பாலத்தின் மீதுள்ள சேதமடைந்த சாலை, மூன்று மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, செய்யாற்று பாலத்தில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement