நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு பள்ளிகளிலும் அறிய ஏற்பாடு
கோவை : கோவை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 353 மாணவர்கள், 18 ஆயிரத்து 941 மாணவிகள், 649 தனித் தேர்வர்கள் ஆகியோர் 128 தேர்வு மையங்களில், பிளஸ் 2 தேர்வு எழுதினர். நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, சில பாடங்களில் குறையலாம் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் காஜா மொய்தீன் கூறுகையில், ''நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம், உயிரியல் போன்ற பாடங்கள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். கணிதம் போன்ற சில பாடங்களில் சில கேள்விகள் கடினமாக இருந்தபோதிலும், இது தேர்ச்சி சதவீதத்தை பெரிதாக பாதிக்காது. ஆனால், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, சில பாடங்களில் குறையலாம்,'' என்றார்.
மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, https://results.digilocker.gov.in மற்றும் www.inresults.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளிகளிலும் முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளியில் சமர்ப்பித்த போன் எண்ணுக்கும் அல்லது தனித் தேர்வர்கள் ஆன்லைனில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கும், குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்