ஏ.டி.எம்., கார்டில் திருடிய இருவர் சிக்கினர்
வியாசர்பாடி,வியாசர்பாடி, 15வது பிளாக்கைச் சேர்ந்தவர் திலகவதி, 21. இவர், பெரியார் நகரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பணிபுரிகிறார். கடந்த 4ம் தேதி, திலகவதி அவரது இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்., கார்டை தொலைந்து விட்டார்.
அடுத்தநாள், வியாசர்பாடி, எஸ்.எம்.நகர் பிரதான சாலை பகுதியில் உள்ள ஆக்சிஸ் ஏ.டி.எம்., மையத்தில், இவரது ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 25,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர்.
இதில், வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த சுரேஷ், 43, என்பவர், கீழே கிடந்த ஏ.டி.எம்., கார்டை எடுத்துள்ளார். கார்டின் பின்புறம் ரகசிய குறியீடும் இருந்துள்ளது.
அதை நண்பர்களான மணிவண்ணன், சந்திரன் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அதில் சந்திரன், 4,000 ரூபாயும்; மணிவண்ணன், 21,000 ரூபாயும் எடுத்துள்ளனர். பின், சுரேஷிற்கு 500 ரூபாய் கொடுத்துள்ளனர். அது போதாது என சுரேஷ் இருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த மீன்பாடி வண்டி ஓட்டுனரான மணிவண்ணன், 36, சந்திரன், 49, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்