இதுவே முதன்முறை!

பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரமிது. ஒரு பிரதமர் இவ்வளவு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தது இதுவே முதன்முறை. பிரதமர் மோடியை போல், எந்த பிரதமரும் ராணுவத்திற்கு இவ்வளவு உச்ச அதிகாரத்தை வழங்கியதில்லை.

தேவ கவுடா, முன்னாள் பிரதமர், மதச்சார்பற்ற ஜனதா தளம்

பாதுகாக்க தவறியது ஏன்?



பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பற்றி முன்கூட்டியே அறிந்ததால் தான், காஷ்மீர் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார். தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே, மத்திய அரசை உளவுத் துறை எச்சரித்துள்ளது. தன் பயணத்தை ரத்து செய்த மோடி, சுற்றுலா பயணியரை பாதுகாக்க தவறியது ஏன்?

மல்லிகார்ஜுன கார்கே, தேசிய தலைவர், காங்.,

துரதிர்ஷ்டவசமானது!



ஒருபுறம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதாக கார்கே கூறுகிறார். மறுபுறம், அதை பலவீனப்படுத்தும் வகையில் பேசுகிறார். பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை கார்கே விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது.

ரவிசங்கர் பிரசாத், மூத்த தலைவர், பா.ஜ.,

Advertisement