கோடை விடுமுறை கோர்ட்டில் ஒரே நாளில் 85 மனுக்கள் தாக்கல்
கோவை: கோடை விடுமுறையில் செயல்படும் கோர்ட்டில், ஒரே நாளில், 85 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கோடை காலத்தை முன்னிட்டு, மே 31 வரை, கோர்ட்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மாவட்ட முதன்மை செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ், சப்-கோர்ட்கள், முன்சிப் கோர்ட்கள், குடும்ப கோர்ட் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கோர்ட்களில், விசாரணை நடைபெறவில்லை. மாஜிஸ்திரேட் மற்றும் சிறப்பு கோர்ட்களில் விசாரணை நடைபெறுகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு, கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், வாரத்தில் ஒரு நாள் மட்டும், அதாவது திங்கள் கிழமை தோறும் ஜாமின் மற்றும் முன்ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யலாம்.
இந்த மனுக்கள் மீது, வியாழக்கிழமை தோறும் விசாரணை நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம், ஜாமின் மற்றும் முன்ஜாமின் கோரி, 85 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீது, நாளை விசாரணை நடைபெறுகிறது. அதே போல சிவில் வழக்குகள் தொடர்பாக, வாரந்தோறும், புதன் கிழமை தாக்கல் செய்யப்படும் மனுக்கள், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
மேலும்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்
-
அங்கன்வாடிகளுக்கு 15 நாள் விடுமுறை