பெண் நக்சல் சுட்டுக்கொலை சத்தீஸ்கரில் போலீசார் அதிரடி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர்- - தெலுங்கானா எல்லையில் உள்ள வனப் பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்புப்படையினர், அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில், பெண் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் இதுவரை, 146 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தெலுங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்ட போலீசார் முன், 14 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர்.

வன்முறையை கைவிட்டு குடும்பத்துடன் அமைதியாக வாழ விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement