'சப் வே' வில் விபத்து தடுக்க நடவடிக்கை

எரியோடு: எரியோட்டில் இருந்து மணியகாரன்பட்டி ரோட்டில் இருக்கும் ரயில்வே சுரங்கப்பாதைக்குள் மழை நீர் புகாதபடி முகப்பு பகுதியில் வாய்க்காலும், அதன் மீது இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் சில திருடு போனதால் மறுசீரமைப்பு செய்யப்படாமல் இருந்தன. இவற்றில் டூவீலர்கள் சிக்கி விபத்துக்களை சந்தித்தன. இதுகுறித்து தினமலர் நாளிதழ் 'இன்பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக தற்போது அப்பகுதியில் விடுப்பட்டிருந்த பகுதிகளில் இரும்பு தடுப்புகள் பொறுத்தி மறுசீரமைப்பு பணியை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.

இதன் மூலம் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement