டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்

ஒட்டன்சத்திரம்: வாடகை உயர்வு கோரி டிப்பர் லாரி , மண் அள்ளும் இயந்திரம் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

உதிரி பாகங்கள், டீசல், புதிய வாகனங்களின் விலை உயர்வு, காப்பீடு, சாலை வரி உயர்வு, ஓட்டுநர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் டிப்பர் லாரி , மண் அள்ளும் இயந்திரத்தின் வாடகையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வாடகை உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு தர வலியுறுத்தி சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒட்டன்சத்திரம் வட்டார தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் குமார், பொருளாளர் முருகேசன் ,சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நுாற்றுக்கு மேற்பட்ட டிப்பர் லாரி, மண் அள்ளும் இயந்திரங்களை வரிசையாக நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தனர்.

Advertisement