நாக வாகனத்தில் திருவல்லீஸ்வரர்
பாடி, பாடியில் அமைந்துள்ள 1,000 ஆண்டுகள் பழமையான திருவல்லீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலை, அதிகார நந்தி சேவையும், மாலை சிம்ம வாகனம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, நான்காம் நாளான நேற்று காலை, சுவாமிக்கு தொட்டி உற்சவம் நடந்தது.
பின், மாலை நாக வாகன புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, திருவல்லீஸ்வரர் அருளை பெற்றனர். ஐந்தாம் நாளான இன்று, மஹா அபிஷேகமும், மாலை ரிஷப வாகன சேவை பஞ்ச மூர்த்தி புறப்பாடும் நடக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement