ரோட்டில் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று

சேதமான மேல்நிலை தொட்டி : தென்னம்பட்டி ஊராட்சி குரும்பபட்டியில் மேல்நிலை தொட்டி அடிப்பகுதியில் சேதம் அடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. ரோட்டோரத்தில் இருப்பதால் உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--குமார், தென்னம்பட்டி.
..........
--------தாழ்வாக உள்ள மீட்டர்பெட்டி : பழநி லட்சுமிபுரம் ரோட்டில் மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதமடைந்தது தாழ்வாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் மீட்டர் பெட்டியை சரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயலட்சுமி, பழநி.
..............----------
ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் : சிலுக்குவார்பட்டி வாரச்சந்தையில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் ஏராளமாக வைத்துள்ளதால் பொதுமக்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது .சந்தை நடத்தும் கடைகளை ஒழுங்குப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், சிலுக்குவார்பட்டி.
............----------
குப்பை குவியல் : பழநி சிவகிரிப்பட்டி ஊராட்சி திருநகர் ரோட்டில் பல நாட்களாக குப்பை அள்ளாமல் குவிந்துள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், பழநி.
............----------
ரோட்டில் ஓடம் கழிவு நீர் : வடமதுரை தென்னம்பட்டி ரோட்டில் சாக்கடை கழிவு நீர் பாய்வதால் அவ்வழியே செல்வோர் அவதிப்படுகின்றனர். கழிவு நீர் ரோட்டில் பாய்வதை தடுக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.-
-நடராஜன், வடமதுரை.
............----------
சுகாதாரக் கேடு : லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோட்டில் நாகணம்பட்டி பிரிவு அருகே நுங்கு மட்டைகள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-
-சுந்தரம், ஒட்டன்சத்திரம்.
..........----------
சாக்கடையின்றி அவதி : குஜிலியம்பாறை நாகையன்கோட்டை புது ரோட்டில் சாக்கடை வசதி இல்லாத கழிவுநீர் ரோட்டில் செல்கிறது .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க புது ரோட்டில் சாக்கடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சவடமுத்து, புதுரோடு.