பூஜாரிகள் வாரியத்தில் சேர முகாம்

குஜிலியம்பாறை, மே 7- --

தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் கிராமப்புறங்களில் உள்ள அரசு கோயில்கள் அல்லாத மற்ற கோயில்களான காளியம்மன் மாரியம்மன், பகவதி அம்மன், பட்டாளம்மன், முத்தாலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் பூஜாரிகளை ஒருங்கிணைத்து கோயில் பூஜாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்யும் நோக்கில் குஜிலியம்பாறை கோவிலுாரில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

மே 6 முதல் மே 8 முடிய மூன்று நாட்கள் நடக்கும் இதில் விண்ணப் பங்களை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., களிடம் போதிய சான்று பெற்று வழங்க வேண்டும்.

ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் திவ்யலட்சுமியிடம் கேட்டபோது, கிராம கோயில் பூஜாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் என்றார். அறங்காவலர் குழு தலைவர் தர்மர், ஹிந்து அறநிலையத்துறை உதவியாளர் பெருமாள்சாமி பங்கேற்றனர்.

Advertisement