பள்ளி வாகனங்களை ஓட்டி சோதித்த கலெக்டர்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் பள்ளி வாகனத்தை ஓட்டி பார்த்து சோதனைசெய்த கலெக்டர் சரவணன் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி வாகனங்களில் உள்ள படிக்கட்டுகள், கதவுகள், ஜன்னல்கள், அவசரகால வழி, இருக்கைகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, சிசிடிவி கேமரா ஆகியவை முறையாக உள்ளதா என்பன உள்ளிட்ட 23 விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என கலெக்டர் சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், ஏ.டி.எஸ்.பி., மகேஷ், தீயணைப்புத்துறை ஆய்வாளர் மயில்ராஜ் சோதனை செய்தனர். ஆய்வின்போது கலெக்டர் சரவணன் பஸ்சை ஓட்டிப்பார்த்து சோதனை செய்தார்.
கலெக்டர் சரவணன் , பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார். தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகள் அழைத்து வருவது குறித்து சோதனை செய்யப்படும். பள்ளி விடும் நேரங்களில் அதிகளவு அரசு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களில் குழந்தைகள் அழைத்து வரும் பட்சத்தில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும்
-
அழிவிலும் அழியா அவிநாசி தலம்
-
எத்னால் ராஜினாமா எப்போது? சிவானந்தா பாட்டீல் கேள்வி!
-
ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்
-
'108' ஆம்புலன்ஸ்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
-
போக்குவரத்து போலீஸ் பெயரில் ரூ.1.50 லட்சம் சைபர் மோசடி
-
மாணவருக்கு மன அழுத்தம் தராத கல்வி எம்.ஜி.வி., குளோபல் அகாடமி பெருமிதம்