திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் 50 புதிய சுகாதார நிலையங்கள்

தமிழகம் முழுதும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, சில மாதங்களாகியும் திறக்கப்படாமல் முதல்வரின் தேதிக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனை, வட்டம் சாராத மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை என மொத்தம், 11,333 மருத்துவமனைகள் உள்ளன.
இந்நிலையில், மாநில அரசின் வேண்டுகோளின்படி, புதிதாக, 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கவும், மருத்துவ பணியாளர்களை நியமிக்கவும், மத்திய அரசு 2022ல் அனுமதி வழங்கியது. இதற்காக, 40 சதவீத நிதியையும் ஒதுக்கீடு செய்தது.
அதனுடன், தமிழக அரசின் 60 சதவீத நிதியையும் சேர்த்து, 2023- -- 2024ம் நிதியாண்டில் தலா, 1.20 கோடி ரூபாய் மதிப்பில், 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள், 50 ஊர்களில் கட்டப்பட்டன.
இதன் கட்டுமானப் பணிகள் முழுதும் முடிவடைந்து, அவை சம்பந்தப்பட்ட துறையிடம், 2024ம் ஆண்டின் இறுதியில் ஒப்படைக்கப்பட்டன. ஆனாலும், இந்த கட்டடங்களுக்கு திறப்பு விழா இதுவரை நடக்கவில்லை.
அனைத்தையும், ஒரே நாளில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறப்பதற்காக, முதல்வரிடம் தேதி கேட்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
எப்படியாயினும், அவற்றை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-நமது நிருபர் -
மேலும்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்
-
அங்கன்வாடிகளுக்கு 15 நாள் விடுமுறை