கோட்டை ரயில் நிலையத்தில் 'லிப்ட்' அமைக்கும் பணி துவக்கம்

சென்னை,கோட்டை ரயில் நிலையத்தில், புதிய லிப்ட் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

எழும்பூர் - கடற்கரை இடையே நான்கு வழித்தடமாக மாற்றப்பட்டு, கடற்கரை - வேளச்சேரிக்கு மீண்டும் ரயில்சேவை துவங்கப்பட்டு உள்ளது.

தலைமை செயலகம், சேப்பாக்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்களில், 80 சதவீதம் பேர் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

பிராட்வே பகுதிக்கும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

ஆனால், இந்த ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள் இல்லாதது குறித்து பயணியர் புகார் கூறினர்.

இதற்கிடையே, கோட்டை ரயில் நிலையத்தில், நடைமேடை - 4ல் புதிய லிப்ட் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.

அடுத்த கட்டமாக, மற்றொரு லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

***

Advertisement