ஐந்து நவீன ஸ்கேனர்கள் தேவை ரயில்வேக்கு போலீஸ் பரிந்துரை
சென்னை, சென்னை சென்ட்ரலில், பயணியரின் வருகை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இங்கிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள்; 300 மின்சார, விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இங்கு வரும் பயணியரின் பாதுகாப்பிற்கு தேவையான வசதிகளை செய்ய கோரி, ரயில்வே நிர்வாகத்திடம், போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கஞ்சா, குழந்தை கடத்தல், மொபைல் போன், நகை திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை விரைந்து பிடிக்க, 'சிசிடிவி' கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
அதேபோல், பயணியரின் உடைமைகளில் வேகமாகவும், துல்லியமாக சோதனை செய்யும் நவீன ஸ்கேனர்கள் தேவைப்படுகின்றன.
அந்த வகை ஸ்கேனர் ஒன்று மட்டுமே இருப்பதால், பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், ஸ்கேன் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் ஒரு ஸ்கேனர் என ஐந்து ஸ்கேனர்கள் மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்கள் தேவையாக இருக்கின்றன. இவற்றை வாங்கி தருமாறு, தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்