பெண்ணுக்கு 'படம்' அனுப்பி டார்ச்சர் செய்தவருக்கு 'கட்டு'
திருச்சி:திருச்சி திருவெறும்பூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், மயிலாடுதுறையைச் சேர்ந்த, 21 வயது மாணவி, அரசு வேலைக்கான போட்டித்தேர்வுக்கு படித்து வருகிறார். இவர், வேங்கூர் பகுதியில் தங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன், மாணவியின் மொபைல்போனுக்கு, தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், ஆபாசமாக பேசியுள்ளார். மேலும், மாணவிக்கு ஆபாச படங்களையும் அனுப்பி உள்ளார். மாணவி திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, அந்த நபர் குறித்து விசாரித்தபோது, அவர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தன், 48, என, தெரிந்தது. மாணவியை நேரில் பார்ப்பதற்காக வேங்கூர் பகுதிக்கு வந்த சித்தனை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்ய முயன்றனர்.
அப்போது சித்தன், போலீசாரிடம் சிக்காமல் இருக்க உய்யகொண்டான் பாலத்தில் இருந்து குதித்தபோது இடது கால் முறிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது காலுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விசாரணையில், அவர் இதுபோல் பல பெண்களுக்கு ஆபாச படம் அனுப்பி, டார்ச்சர் செய்ததும், யதார்த்தமாக கிடைக்கும் மொபைல் போன் எண்களுக்கு போன் செய்து பேசும் பழக்கம் கொண்டவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்