கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

புதுச்சேரி: மூலக்குளத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். மூலக்குளம், ஜான்குமார் நகர் விரிவாக்கம் அருகே வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டி வருவதாக தகவல் வந்தது.

அங்கு சென்ற போலீசார், கத்தியுடன் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். பிச்சைவீரன்பேட், பாரீஸ் நகரை சேர்ந்த சிராக், 19; என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சிராக்கை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

Advertisement