அரசு பஸ்கள் அனைத்திலும் 'சிசிடிவி' கேமரா பொருத்த கோரிக்கை

கோவை: அனைத்து அரசு பஸ்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக, 20 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
அரசு பஸ்களில் பல்வேறு புதிய அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தானியங்கி கதவு, பைக்குகள் பஸ் சக்கரத்தில் சிக்குவதை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில், 100 பஸ்களில் ரிவர்ஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, பின்னால் வரும் வாகனங்களை, எளிதில் அறிந்து பஸ் இயக்க முடிகிறது.
இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பஸ்களின் உள்ளே கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை விடப்பட்டது.
கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 400 பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதை அனைத்து அரசு பஸ்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக்கழக அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கோவை கோட்டத்தில், 100 தாழ்தள சொகுசு பஸ்களில், ரிவர்ஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசு பஸ்களிலும் கேமராக்கள் பொருத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கோரப்பட உள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட உடன், கேமராக்கள் பொருத்தப்படும். பஸ் ஒன்றுக்கு நான்கு கேமராக்கள் வரை பொருத்தப்படும்' என்றார்.
மேலும்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்