எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அநாகரீகமாக செயல்படும் எதிர் அணியினர் நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் பினாமி ஒருவர் விளம்பர அரசியல் செய்து வருவதாக சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு குற்றச்சாட்டியுள்ளார்.
அவர், கூறியதாவது:
எனது மக்கள் சேவைகளை மீறி அரசியல் செய்ய முடியாமல் ஓடிய நபர், பினாமியாக ஒருவரை நியமித்து உருளையன்பேட்டை தொகுதியில் விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த பினாமி நபர், அரசு பணிகளை பார்வையிட்டு தரமாக செய்ய வேண்டும் என கூறி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை அன்றாட பணியாக கொண்டுள்ளார்.
இவர்களின் காழ்ப்புணர்ச்சி அரசியல், விளம்பர அரசியல் பற்றி தொகுதி மக்கள் நன்கு அறிவர். இவர்களது எந்த முயற்சியும் தொகுதி மக்களிடம் எடுபடாது. அடுத்த ஆண்டு 2026ல் சட்டசபை தேர்தல் வர இருப்பதால், எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், எதிர் அணியினர் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.எனது மகன் வீட்டு அருகே நடத்தப்பட்ட சம்பவம் இவர்கள் துாண்டுதலால் தான் ஏற்பட்டது. நான் அன்று இரவு சரியான நேரத்திற்கு என் மகன் வசிக்கும் வீட்டிற்கு சென்றதால், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
கேட்க கூடாதவர்களின் பேச்சை கேட்டு, தகராறில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்களின் அறியாமையையும், அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று எச்சரித்து அவர்கள் மேல் புகார் கொடுக்காமல் மன்னித்து அனுப்பினேன்' என்றார்.
மேலும்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்
-
அங்கன்வாடிகளுக்கு 15 நாள் விடுமுறை