வரி விதிக்க லஞ்சம் '‛பில் கலெக்டர்' சிக்கினார்

திருப்பரங்குன்றம்:மதுரை, திருப்பரங்குன்றம், கீழரத வீதி வங்காளம் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். பாம்பன் நகரில் உள்ள இவரது இடத்தில், வீடு கட்டுவதற்காக காலியிட வரி விதிப்பிற்கு விண்ணப்பித்தார்.
மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் சிவகுமார், 15 நாட்களாக கார்த்திகேயனை அலையவிட்டு உள்ளார். இறுதியில், 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கார்த்திகேயன் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, ஹார்விபட்டி டீக்கடையில் வைத்து, சிவகுமாரிடம், கார்த்திகேயன், 9,000 ரூபாயை கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்
Advertisement
Advertisement