இரு வீடுகளின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி, பணம் திருட்டு
கோவை: மாநகரில் இரு வேறு இடங்களில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருடிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தொப்பம்பட்டி, குருடம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 48; கோவையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி தனது சொந்த ஊரான, சேலத்திற்கு சென்றார். நேற்று முன்தினம், நள்ளிரவு கோவை திரும்பினார்.
தொப்பம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, அவரின் பையில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் கம்மல், 2 சவரன் செயின் ஆகியவை திருட்டு போயிருந்தது.
மற்றொரு சம்பவம்
சிங்காநல்லுார், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்தவர் புவனேஷ், 31. கடந்த, ஏப்., 27ம் தேதி தனது குடும்பத்தினருடன் திருச்செங்கோடு சென்றார். கடந்த, 4ம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ஐந்து சவரன் தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 17 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்
-
அங்கன்வாடிகளுக்கு 15 நாள் விடுமுறை