முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருபுவனை: திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளியின் கடந்த 2006-2007ம் கல்வியாண்டு 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் மாணவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சங்கீதா, சாருநிஷா, நந்தினி, மணிமாறன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகத்தனர்.முருகன் வரவேற்றார். ஆசிரியர்கள் சக்திவேல், சுரேஷ் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவ, மாணவிகள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் செலவில் ஜெராக்ஸ் மிஷின் வழங்கினர். மாணவி நந்தினி நன்றி கூறினார்.

Advertisement