பாகிஸ்தானுக்கு நெத்தியடி கொடுத்த இந்திய ராணுவம்; ஆபரேசன் சிந்தூர் குறித்து நிபுணர்கள் கருத்து

11


புதுடில்லி: ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறையை சேர்ந்த நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

போர்க்கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து நள்ளிரவில் அதிரடியாக தாக்குதலை துவக்கி அசத்தியது நம் ராணுவம். இந்திய ராணுவம் இன்று (மே.07) நள்ளிரவில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதலை துவக்கியது.

ஆபரேசன் சிந்தூர் பாதுகாப்புத் துறையை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:

ஓய்வு பெற்ற பாதுகாப்புத்துறை நிபுணர் கேப்டன் அனில் கவுர் கூறியதாவது: ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தைத் தொடங்கியுள்ளன, மேலும் ஒன்பது இலக்குகள் வெற்றிகரமாகத் தாக்கப்பட்டுள்ளன.



பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்களின்படி, பயங்கரவாதிகள் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் ஒன்பது முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்தியா எதையும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


முன்னாள் இந்திய விமானப்படைத் தலைவர் ஆர்.கே.எஸ்., பதாரியா கூறியதாவது: பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ஆயுதப்படைகள் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை தொடங்கியுள்ளன.


பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 முகாம்களில் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.


பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பிரதமர் மோடியின் ஒட்டுமொத்த வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பழிவாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement