பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி; காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்!

3


ஸ்ரீநகர்: ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதனை காஷ்மீர் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆட்டம் ஆடிய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை இந்திய ராணுவம் துவங்கி உள்ளது.



இதனை காஷ்மீர் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். காஷ்மீர் மக்கள் ஒன்று கூடி 'பாரத் மாதா கீ ஜெய்' என்ற கோஷங்களை எழுப்பினர். இது குறித்து காஷ்மீரை சேர்ந்த உள்ளூர்வாசிகள் கூறியதாவது: நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.


பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலுக்காக நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். இந்தத் தாக்குதல் ஆதாரங்களுடன் நடந்துள்ளது. நாங்கள் ராணுவத்துக்கு ஆதரவாக நிற்கிறோம். பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றனர்.

Advertisement