மாடியில் இருந்து குதித்த பெண் பலி
போடி:போடி திருமலாபுரம் சொக்கன் சந்தில் வசிப்பவர் ஜெயபால். இவர் சவுதியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வினிஷா 24. இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சவுதியில் இருந்து ஜெயபால் போடிக்கு வந்துள்ளார்.
திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டியில் வசிக்கும் வினிஷாவின் தாயார் ஜெயலட்சுமி, தந்தை ரங்கசாமி மகளை பார்ப்பதற்காக போடி வந்துள்ளனர். அப்போது,' தான் குடியிருக்கும் வீடு சிறிதாக உள்ளது. பெரிய வீடு பார்த்து போக வேண்டும்,' என தாயார் ஜெயலட்சுமியிடம் வினிஷா கூறி உள்ளார்.
பிறகு பேசிக் கொள்ளலாம் என தாயர் கூறினார். உடனே பேசி முடிக்க வேண்டும் என அடம் பிடித்துள்ளார். பேசிக் கொள்ளலாம் என வினிஷாவின் பெற்றோர் ஊருக்கு கிளம்பி உள்ளனர். வினிஷா கோபித்துக் கொண்டு வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த வினிஷா போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். தாயார் ஜெயலட்சுமி புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.