மரம் விழுந்துதொழிலாளி பலி

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. சிவகிரியிலும் மழை பெய்தது. சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமை தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் தங்கவேல், 63. நேற்று மாலை, 5:00 மணியளவில் விற்பனை கூடத்துக்கு வெளியே சிறிது துாரத்தில் மழைக்காக வேலமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றார்.

அப்போது திடீரென மரம் சாய்ந்து தங்கவேல் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement