அடமான பத்திரத்தை மீட்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் சார்பதிவாளர், எழுத்தர் கைது

5

விருதுநகர்: விருதுநகரில் அடமான பத்திரத்தை மீட்க வந்தவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் முருகன்44, எழுத்தர் மோகன் 54, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைசேர்ந்த ஆரோக்கியசாமி, 1982ல் தனது வீட்டு பத்திரத்தை ரூ.3 ஆயிரத்திற்கு அடமானம் வைத்து கடன் பெற்றார்.

இது போன்ற கடன் பெற்றோரின் நிலுவை தொகைகளை 2008ல் அரசு ரத்து செய்தது.

இதையடுத்து ஆரோக்கியசாமி தனது வீட்டு அடமானம் வைத்த பத்திரத்தை மீட்க 2 மாதங்களாக விருதுநகரில் உள்ள வீட்டு வசதி சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்திற்கு அலைந்துள்ளார்.

வந்தவரிடம் சார் பதிவாளர் முருகன், எழுத்தர் மோகன் ஆகியோர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். ஆரோக்கியசாமி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். இதை சார்பதிவாளர், எழுத்தர் இருவரிடமும் கொடுத்தார். அப்போது டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement