குழந்தைகள் பாதுகாப்பு : கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பில், போக்சோ சட்டம், சிறார் நீதி சட்டம் மற்றும் குடும்ப வன்முறை சட்டம் மற்றும் குழந்தை நலக்குழு சீராய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு துறையுடன் இணைந்து மறுவாழ்வு அளித்தல், பள்ளி இடைநின்ற குழந்தைகளுக்கு தொழிற்கல்வி, பள்ளியில் சேர்வதற்கு வழிவகை செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் ஏழ்மை நிலையிலுள்ள குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு உதவித் தொகை வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.