பிரபல ரவுடி கொலையில் பெண் உட்பட 7 பேர் கைது

மைசூரு : மைசூரில் ரவுடி கொலை வழக்கில் ஒரு பெண் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு டவுன் கியாத்தமானஹள்ளியை சேர்ந்தவர் கார்த்திக், 33; ரவுடி. இவர் சிறையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியில் வந்தார்.
கடந்த 5ம் தேதி, மைசூரு அருகே உள்ள ஹோட்டலுக்கு கார்த்திக் சாப்பிட சென்றார். அங்கு காரில் வந்த மூன்று பேர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை குறித்து வருணா போலீசார் விசாரித்து வந்தனர். இதில் பெண் விவகாரத்தில் கார்த்திக்கிற்கும், அவரது டிரைவர் பிரவீனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதும் பிரவீனுக்கு கார்த்திக் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.
இதனால் பயத்தில் பிரவீன், தன் கூட்டாளிகளுடன் இணைந்து கார்த்திக்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மைசூரு நகர் பகுதியை சேர்ந்த பிரவீன், 27, அவினாஷ், 24, ரவி, 29, சந்துரு, 30, ஆனந்த், 28, வெங்கடேஷ் ஷெட்டி, 26, லட்சுமி, 28, ஆகிய ஏழு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்