கங்கலேரி தடுப்பணை கால்வாய் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனுாரில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கங்கலேரி தடுப்பணை உள்ளது. இங்கிருந்து நேரடி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு, 4 முதல், 5 அடி அகல கால்வாய் மூலம், 7 கி.மீ., தொலைவிற்கு சென்று கங்கலேரி ஏரியில் கலக்கிறது. இக்கால்வாயின் பல இடங்களில் சேதம் அடைந்தும், மண் அரிப்பு ஏற்பட்டும் உள்ளதால், இவற்றை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சேதம் அடைந்த பகுதிகளில் பக்கவாட்டு தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை கங்கலேரி கிராமத்தில், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி
வைத்தார். நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் படிகாசு, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் செல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.