முல்லைப் பெரியாற்றில் மூழ்கி கோவை மாணவி பலி

கூடலுார்: கோயம்புத்தூரைச் சேர்ந்த ரமேஷ் மல்லிகா தம்பதியின் மகள் நிவேதா 16. அங்குள்ள பள்ளியில் பிளஸ்1 படித்தார். பள்ளி விடுமுறைக்காக கூடலுாரில் உள்ள பாட்டி வீட்டிற்கு தனது அண்ணன் மணிகண்டன் மற்றும் தாய் தந்தையுடன் வந்தார். நேற்று காலை 11:00 மணிக்கு குடும்பத்தினருடன் கூடலுார் அருகே முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்றனர். வண்ணான்துறையில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட தடுப்பணையை ஒட்டி குளித்த போது நிவேதா ஆற்றில் மூழ்கினார். சிறிது நேரத்திற்கு பின் மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டது. லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.
எச்சரிக்கை
தற்போது கோடை விடுமுறைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு வருகின்றனர். கடுமையான வெப்பம் நிலவுவதால் ஆற்றில் ளிக்க விரும்பிச் செல்கின்றனர். தற்போது நீர் திறப்பு குறைவாக இருந்த போதிலும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது. அதனால் ஆற்றில் குளிக்க வருபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.