போலீஸ் செய்தி
கார் மோதி முதியவர் பலி
சாத்துார்: சாத்துார் ஒத்தையாலை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன், 65.நேற்று அதிகாலை 4:35 மணிக்கு ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது சாத்துாரில் இருந்து ஏழாயிரம்பண்ணை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியதில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ
சாத்துார்: சாத்துார் அருகே நடுச்சூரங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன், 35. திருமணம் ஆனவர். அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
லாரி பறிமுதல்: இருவர் மீது வழக்கு
சாத்துார்: ஆலங்குளம் அருகே கண்டியாபுரத்தில் வி.ஏ.ஓ ராமசாமி பாண்டியன் தலைமையில் வருவாய் துறையினர் வாகன சோதனை செய்தனர்.அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது டிப்பர் லாரியில் முறையான அனுமதி இன்றி ஒரு யூனிட் உடைகல் இருப்பது தெரிய வந்தது. விஜயகரிசல்குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன், உரிமையாளர் மகேஸ்வரி மாலதி ஆகியோர் மீதுஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மனைவி கொலை; கணவர் பிடிபட்டார்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வெள்ளாளர் வடக்கு தெருவை சேர்ந்த பரமேஸ்வரியை 55, அவரது கணவர் மாரியப்பன் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். வத்திராயிருப்பு போலீசார் நேற்று மாரியப்பனை ராஜபாளையத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலைபேசி பறித்த 4 பேர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே என். புதுாரை சேர்ந்தவர் பத்மநாபன் 21, தனியார் பால் கம்பெனி ஊழியர். இவருடன் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் இரண்டு டூவீலர்களில் சங்கரன்கோவில் ரோட்டில் வந்த போது பத்மநாபன் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
எதிரே இரண்டு டூவீலரில் வந்த 4 பேர் உதவுவது போல் இருவரிடம் அலைபேசியை பறித்து தப்பினர். தெற்கு போலீசார் கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது தெற்கு வெங்காநல்லுாரை சேர்ந்த தீபக், அன்புராஜ், குரு பாண்டியன், பிரசாந்த் உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டது தெரிந்து டூவீலர், அலைபேசிகளை பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி; காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்!
-
பெருமை தரும் ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி
-
‛ஆபரேஷன் சிந்தூர்' பெயர் ஏன்?
-
பாகிஸ்தானுக்கு நெத்தியடி கொடுத்த இந்திய ராணுவம்; ஆபரேசன் சிந்தூர் குறித்து நிபுணர்கள் கருத்து
-
பக்தர்கள் புகார் அளிக்க ஏற்பாடு
-
மாடியில் இருந்து குதித்த பெண் பலி