சாலையில் 'ஹாயாக' நடந்து சென்ற ஒற்றை யானை



ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்தில் மொத்தம், 40க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜவளகிரி வனச்

சரகத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தேவர்பெட்டா அருகே மல்லேஸ்வரம் கிராமத்திற்குள் புகுந்தது.

அப்பகுதியில் உள்ள கிராமப்புற சாலையில் யானை ஹாயாக நடந்து சென்றது. இதை பார்த்த நாய்கள் யானையை பார்த்து குரைத்தன. இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அக்கிராமத்தில் சிறிது நேரம் முகாமிட்டிருந்த யானை, மீண்டும் அதிகாலை நேரத்தில் வனப்பகுதி நோக்கி சென்றது. யானை நடமாட்டம் உள்ளதால், மல்லேஸ்வரம், தேவர்பெட்டா கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement