கார், லாரி மோதல்: இருவர் காயம்

ஆண்டிபட்டி: மதுரை கரிமேடு அழகரடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிகுமார் 35, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தனது மனைவி வீருசின்னம்மாளுடன் சொந்த ஊரான பெரியகுளம் வடுகபட்டி சென்று விட்டு மதுரைக்கு காரில் திரும்பினார்.

ஆண்டிபட்டி கணவாய் சாஸ்தா கோயில் அருகே எதிரே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி காரில் மோதியது. விபத்தில் பாண்டிகுமார் அவரது மனைவி வீருசின்னம்மாள் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement