கட்டடம் சரிந்து கொத்தனார் பலி

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் ஜாபர் சுல்தான். இவரது வீடு அதே பகுதியில் கட்டுமானப்பணி நடக்கிறது.

கெங்குவார்பட்டி பகவதிநகரைச் சேர்ந்த கொத்தனார் காமாட்சி 38. நேற்று கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராத விதமாக கட்டடம் மேற்பகுதி காமாட்சி மீது சரிந்து விழுந்ததில் பலியானார். அந்தப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பெரியகுளம் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய காமாட்சி உடலை மீட்டனர். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement